காற்று எனும் கயவன் களவாடும் அழகு

ஏய் பெண்ணே என் கண்ணே
எத்தனை முறை சொல்வது

வான் நிலவு முன் நில்லாதே
நிலவும் கண் வைக்கும் உன்வட்ட முகம் பார்த்தே யென

ஏய் பெண்ணே என்கண்ணே
எத்தனை முறை சொல்வது

சந்தனம் பூசாதே ...வீசிவிடு
வீதியில் என ...நீரின்றி குழைந்திடும்
மணக்கும் சந்தனமும் உன்னழகில் முனுங்கி

ஏய் பெண்ணே என் கண்ணே
எத்தனை முறை சொல்வது

உடை கொண்டு மூடிடு உன் இடையை ...காற்று எனும் கயவன்
களவாட வருகிறான் உன் அழகை

ஏய் பெண்ணே என் கண்ணே
எத்தனை முறை சொல்வது

நீ கோலம் இடுகையில் நிலம் பார்க்காதே யென மண் சிவந்திடுச்சி
உன் கண் பேசும் காதல் மொழி கண்டு..

ஏய் பெண்ணே என் கண்ணே
எத்தனை முறை சொல்வது

வானம் பெத்தெடுத்த விண்மீன் பாராதே என்று ஒளிர்விடும் உன்னழகை கண்டு ஒளிந்தனவே
நட்சத்திரம் எலாம் மேகம் பின்னே

ஏய் பெண்ணே என் கண்ணே
எத்தனை முறை சொல்வது

சூரியனும் வானும் மோகம் கொண்டு
மேகம் எனும் ஏட்டில் வரைந்த
வானவில் காணாதே யென எழுவண்ணம் எழுச்சி கொண்டு
எண்நூறு வண்ணம் ஆனது இப்போ

ஏய் பெண்ணே என் கண்ணே
எத்தனை முறை சொல்வது

எங்கேயும் செல்லாதே எவற்றையும் காணாதே என....

மீறி கண்டால் உன் அழகு கண் படும் உனக்கு திருஷ்டி சுற்றி போட்டே என் ஆயுளும் கூடிடும் ...
காலமும் ஓடிடும்
கடவுளும் காத்திருக்கான் ...
வாராயே என் கண்ணே .

எழுதியவர் : பாளை பாண்டி (22-Jan-22, 5:26 am)
சேர்த்தது : பாளை பாண்டி
பார்வை : 159

மேலே