அறுபதாம் கல்யாணம்

அறுபது வருட காலத்தில்
இருபதாம் வருடம் துவக்கத்தில்
பருவம் எய்திய குறுகுறுப்பில்
மருவு ஆசையின் தூண்டலில்

கருத்தொருமித்த இரு இதயங்கள்
கைத்தலம் பற்றிய நாள்முதல்
உரு அது இரண்டாய்
உயிர் அது ஒன்றாய்
உருகி ஒன்றிப் பிணைந்து
தருவதும் பெறுவதும் பயின்று

அன்பும் அறனும் வழிநடத்தப்
பண்பும் பயனும் ஈன்றெடுத்த
நன் மக்கட்பேறே என்றும்
என்றென்றும் ஈடில்லா சொத்தாம்
இறைவன் கொடுத்த வரம்.

வாழ்க்கை நிறைவு கண்டு
வழுவா முழுமை கொண்டு
மகிழ்வுறும் நன்னாளின் இனிய
நிகழ்வே அறுபதாம் கல்யாணம்..

.அகவை அறுபது பூர்த்தி தந்த
அழகு மணக்கோலம் பூண்டீர்!
அருமைக் காட்சி கண்டு
பெருமையால் உள்ளம் பூரிக்கின்றேன்

அது வெற்றிப் பயணத்தின்
அற வாழ்வின் திருக்கோலம்
அற்புத காட்சி கண்டு
பெரிதும் அகம் மகிழ்கிறேன்

இதயங்கள் பேசும் காதலில்
உதயமாகும் புது வாழ்வில்
இன்று போல் என்றென்றும்
இன்புற்று வாழ்க! வாழ்க வளமுடன்!.

எழுதியவர் : கிருஷ்ண சதானந்த விவேகானந (22-Jan-22, 7:29 am)
பார்வை : 62

மேலே