காதல் பைங்கிளியே

சுருக்கு பையில் மடிச்சு வச்ச
வெத்தலையை போல்
உன் மனமென்னும்
சுருக்கு பையில் என்னை
மடிச்சு வச்சவளே...!!

உன் சுருக்கு பையை திறந்து
நீ வெத்தலை எடுத்துப்போட்டால்
உன் வாய் சிவக்கும்....!!

உன் மனமென்னும்
சுருக்கு பையில் இருந்து
வெளியே வந்து
நான் முத்தம் தந்தால்
உன் உதடு சிவக்கும்...!!

இதில் யார் தந்த சிவப்பு
ஒசத்தினு சொல்லு
என் காதல் பைங்கிளியே..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (22-Jan-22, 8:10 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaadhal paingiliye
பார்வை : 128

மேலே