இடையில் வந்தான்

இடையில் வந்தான்.

இறைவன் படைத்தான்
உலகினை,
பின்பு படைத்தான்
மனிதனை.

படைத்த உலகை
கொடுத்தே சொன்னான்
அவனிடம், மானிடனே!
உலகில் உண்டு
உனக்கு எல்லாம்,
அணைத்து வாழ்
அயலவரை,
பகிர்ந்து வாழ்
மற்றவருடன்.

வாழ்தான் மனிதன்
இவ்வுலகில்,
வாழ்ந்தான் அவன்
கோடி காலம்,
இறைவன் சொல்லை
மறக்காமல்,
தன்னை இறைவன்
என்று நினைக்காமல்.

இடையில் வந்தான்
எவன் ஒருவன்,
தனக்கு தெரியும்
கடவுளை என்றான்,
அதனால் தன்னை
உயர்த்தி என்றான்.

கழித்து வந்தான்
இன்னொருவன்,
அவனோ தன்னை கடவுளின்
மகன் என்றான்.

இப்போ மனிதன்
தன்னை கடவுள்
என்கிறான்!
கடவுள் இருந்தால்
காட்டு என்கிறான்!

காட்டினான் கடவுள்
தன்னை யாரென்று,
தனக்கு பெயர்
கோவிட் என்றான்.

படைப்பை என்னிடம்
விட்டு விடு,
நான் படைத்ததை
எல்லாம் மாற்ற நீ நினைக்காதே.

மீண்டும் தப்பு
செய்தாய் என்றால்!
அழிந்தே போவாய்
மானிடனே என்றது
இந்தக் கடவுள்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்
.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (22-Jan-22, 8:24 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : idaiyil vanthan
பார்வை : 79

மேலே