மாமர வேர் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சீதரத் தப்போக்கை சிக்கெனவே தான்பிடிக்கும்
போதவயிற் றுக்கடுப்பைப் போக்குங்காண் - ஓதுகின்ற
வாந்தியையுந் தீர்க்கு(ம்)வெளி மாமரத்தின் வேர்ப்பட்டை
பூந்துகின் மாதே புகல்

- பதார்த்த குண சிந்தாமணி

மாமரவேரின் பட்டை சீத இரத்தபேதி, வயிற்றுக் கடுப்பு, வாந்தி ஆகியவற்றைப் போக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Jan-22, 6:50 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே