சிறுகுறிஞ்சா வேர் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சிறுகுறிஞ்சா வேர்விஷத்தைத் தீர்க்கும் அனிலத்
துறுசுரங்கள் வாதம் ஒழிக்கும் - தெறிபாணக்
கண்ணா யிரும(ல்)முதற் காசசுவா சந்தணிக்கும்
விண்ணா டருக்கிதனை விள்

- பதார்த்த குண சிந்தாமணி

இவ்வேர் விடம் தீர்க்கும்; சுரங்கள், வாதம், இருமல், சுவாச காசம் ஆகியவற்றைப் போக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Jan-22, 8:49 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 5

மேலே