புதர் தலைப்பொண்ணு

டேய் நக்குல், இன்னிக்கு நாம பாத்துட்டு வந்த பொண்ணு ரொம் அழகா இருக்குறா. நல்ல படிப்பு. ஒரே பொண்ணு. கோடீஸ்வரி. அந்தப்பொண்ணுக்கும் அவளோட அம்மா, அப்பாவுக்கும் சம்மதம். நீயென்னடா நக்குல் சொல்லற?
@@@@@@@
நீங்க சொல்லறதெல்லாம் சரிதாம்மா. ஆனா... ஆனா...
@@@@@
என்னடா நக்குல் ஆனா, ஆனா?
@@@@@@
அவளோட தலையைப் பாத்தீங்களா?
@@@@@@
அதுக்கென்னடா?
@@@@@@
தலைமுடி புதர் மாதிரி வளர்ந்து கெடக்குது. அதுதான் அவள் அழகின் இரகசியம்னு அவளோட அம்மா சொன்னாங்க.
@@@@@@
அவுங்க சொன்னது சரிதான்டா நக்குல்.
@@@@@@
ஆனா... அந்தப் புதர் தலைல பாம்பு, பல்லி தங்கினாக்கூடத் தெரியாது. அம்மா. வேண்டாம்மா. வேண்டாம். அந்தப் புதர் தலைப் பொண்ணு. எனக்கு சின்ன வயசிலிருந்தே கரப்பான் பூச்சி, பல்லி எல்லாம் பாத்தாப் பயம். அந்தப் புதர் தலைப் பொண்ணு வேண்டாம்மா.
@@@@@@
பெரிய சொத்துக்காரி. நான் பெத்த நக்குலுக்குக் குடுத்து வைக்கல.
@@@@@@@@@@@

எழுதியவர் : மலர் (23-Jan-22, 10:20 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 111

மேலே