திரிகடுகு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

முக்கடுகால் ஆசியநோய் மூலங் கொடிறுபிணி
திக்கடுபாண் டோடு சிரத்துறுநோய் - அக்கடுக்குந்
தாவரநஞ் சென்றுலகிற் சாற்றுமிந் நோய்முழுதுந்
தீவரநஞ் சுண்டிறக்குந் தேர்

- பதார்த்த குண சிந்தாமணி

இன்னிசை வெண்பா

திரிகடுகால் சீதபித்தஞ் சிக்குவை நோய்கீடம்
ஏரிகடு தோளை யிருமல் - முடுகுசந்நி
யாசம் அருசிய பஸ்மாரம் அற்புதப்புண்
வீசசர்க்க ராற்புதம்போம் விள்

- பதார்த்த குண சிந்தாமணி

இம்முக்கடுகால் ஆசிய நோய், மூலம், கொடிறுபிணி, பாண்டு, தலை நோய், தாவரநஞ்சு, பித்தம், சிக்குவை, கிருமி நோய், பாம்பின் விடம் போன்ற விடங்கள் கோழை, காசம், முடுகு, சன்னி, உணவில் வெறுப்பு, அபஸ்மாரம் , விரணம் , நாடி விரணம் இவை விலகும் .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Jan-22, 8:15 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே