முடிவு, முடிவு

முடிவு, முடிவு;
முடிவதில்லை முடிவு;
முயற்சித்தால் உண்டு விடிவு;
முடியாதது என்பது ஒன்றும் இல்லை;
முடிவில் உண்டு துவக்கம்;
முடியாது என்று தூங்கினால்
வரும் தயக்கம்;
முடிந்து விட்டது எல்லாம் என்றால்
வரும் நடுக்கம்;
முடிவு முடிவதில்லை;
முயற்சி விடுவதில்லை;
முடிவில் வேண்டாம்
முட்டாள் தனம்;
முடிவை நினைத்து
மடிக்க வேண்டாம் வாழ்வை;
முடிவை முடிவாக்காதே;
முடிவை விடிவாக்கு;
முடிவு துவக்கமாகட்டும்;
முடிவில் வேண்டாம் துக்கம்;
முடியவில்லை என்று முழுதாய் ஒதுங்காதே;
முடியும் என்று பொறுத்து செயல்படு;
முடிவை முதலாக்கு;
மூளையை மூலதனமாக்கு;
முடிவு மடிவதில்லை;
முடிவை திடமாக்கு;
முடியாதது என்று ஒன்றும் இல்லை;
முயலாமையை முன்னே போக விடாதே;
முயலும் ஆமையாக ஓடினாலும்,
முடியும் என்ற நம்பிக்கையோடு ஓடு;
முடிவு முடிச்சு தான், முயற்சித்தால் சிக்கல் தீரும் தான்;
இருளின் முடிவு வெளிச்சத்தல்;
இரவின் முடிவு
விடியலில்;
இளமையின் முடிவு முதுமையில்;
இரக்கத்தின் முடிவு தியாகத்தில்;
இனிமையின் முடிவு
கசப்பில்;
இன்பத்தின் முடிவு துன்பத்தில்;
அறியாமையின் முடிவு
அறிவு ஆற்றலில்;
அகந்தை ஆணவத்தின் முடிவு; அழிவில்;
பிறப்பின் முடிவு
இறப்பில்;
பிரிவின் முடிவு
உடன் சேர்வதில்;
ஆசையின் முடிவு
அழிவில்;
தொடக்கமும் முடிவும்
தொடர்பயணம் தான்;
மழையின் முடிவு மண்ணில் தான்:
மனிதனின் முடிவு
உறவோ உடமையோடு இல்லை;
உடலோடு தான்;

மரத்தின் முடிவு வேருக்கு;
மானத்தின் முடிவு கரங்களுக்கு;
காற்றின் முடிவு
சுவாசத்திற்கு;
நதியின் முடிவு கடலுக்கு;
நன்மையின் முடிவு
நலனுக்கு;
விதியின் முடிவு
விவேகத்திற்கு;
சதியின் முடிவு
மதிக்கு;
சந்தேகத்தின் முடிவு
தெளிவான அறிவுக்கு;
துக்கத்தின் முடிவு
தூக்கத்தில் தான்;
விண்ணின் முடிவு
விழி எட்டும் வரைதான்;
ஏழையின் முடிவு
வறுமைக்கு;
ஏக்கத்தின் முடிவு
துக்கத்திற்கு;
எடுக்காத முடிவு,
ஏமாற்றத்திற்குத் தான்;
தடுக்காத முடிவு,
தடுமாற்றத்திற்குத்தான்;
தவறான முடிவு;
சோகத்திற்கு தான்;
தயங்காத முடிவு
வெற்றிக்குத் தான்;
நல்ல முடிவு
நன்மை பயக்கும்.

முடிவுகளை சிந்தித்து எடு;
சந்திக்க வேண்டிய, மாற்றங்கள், தடைகள் பல பல வரலாம்;
முடிவை முறையாக எடு;
முழு மூச்சுடன் செயல்படு;

வயதின் முடிவு முதுமையில்;
வாழ்வின் முடிவு மரணத்தில்;
வறுமையின முடிவு வராத பட்டிணியில்;
வருடத்தின் முடிவு,
புதிய ஆண்டின் துவக்கத்தில் ;
முடிவிக்குள் முடிவு,
முடங்கிவிட்டால் ஏது விடிவு;
முழுமையாக போராடு;
முடிவு சுகமாய் முடியும்;.
அ. முத்துவேழப்பன்

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (24-Jan-22, 3:53 pm)
பார்வை : 135

மேலே