குடியரசு தினம்

குடியரசு தினம்
மூவர்ணக் கொடி சுதந்திரக் காற்றினில் படபடக்க
முப்படைத் தளபதிகள் நெஞ்சு நிமிர்ந்து படை நடத்த
முக்கிய விருந்தினருடன் பிரதமரும் வருகை தந்திட
போர்காப்புச் சாதனங்களை வீரர்கள் பெருமையோடு
அழகான காட்சியாக அமைத்து காணும் ஊர்தியாக்கி
நாட்டின் உன்னத நிலையை அவை யாவும் பறைசாற்ற
மக்கள் திரண்டு வந்து இக்காட்சியை கண்டு களிக்க
இன்னிசையையோடு தேசிய கீதத்தை இசைத்தவாறு
தாயின் மணிக்கொடியை வாழ்த்தி வணங்கியபடியே
நாட்டின் பிரதிநிதிகளுக்கு தங்கள் மரியாதையைச் செலுத்தி
இந்திய மண்ணில் பிறந்த அனைவரும் மகிழ்ந்து கொண்டாடும்
இனியதொரு நாள் இந்த குடியரசு தினம் என அறிவோமே!

எழுதியவர் : கே என் ராம் (24-Jan-22, 9:06 pm)
சேர்த்தது : கே என் ராம்
Tanglish : kudiyarasu thinam
பார்வை : 197

மேலே