காதல் முத்தம்

அணைக்க மனமில் லாதிழுப் பானாம்
இன்னும் நாலு இழுப்புக் கடைசியில்
ஏனோ தான்குறை மனதில் கீழேப்
போட்டு அணைப்பன் பாருமே
சிகரெட் துண்டைச் சொன்னேன் கேளே

பால்மணம் வீசும் பச்சிளங் குழவியை
அணைக்க என்னவோர் சுகமிறைப் படைப்பில்
வளர்ந்த பின்னும் தூக்கிக் கொஞ்சியு
மணைத்து தூக்கி பொங்கி முத்தம்
எங்குமே பதித்து மகிழ்வர்
அன்றைய உறவிதும் மறந்தா ரின்றே

காமத்தை விடலைக் காதலென்று விளிக்கும்
சாயும் வேளையில் யிருள்கவ்வும் இடந்தேர்ந்து
பாய்ந்தணைப்பர் பிறர்தோன் றாவேளை யிலேதான்
பச்சென்று பலயிச்சை பரிமாறி டுமவசரம்
உச்சம் தூக்கும் இச்சை உந்தலால்
மிச்சத்தை சுகிர்க்க தேர்வராம் தனியிடம்
சொச்சமும் முடிப்பரங்கே அறிவிலாதே அடிக்கடி
அச்சமின்றி வயிற்றிலே மூன்றுமாதம்
பின்னரே வளரும்பர் பெரும்பிரச் சனைகளே


இதுவா பழந்தமிழர் யேற்ற மரபு
புதுசாம் திராவிடர் கொள்கை -- இதுவும்
விதுசகர் பாடம் விதியென மாறிச்
சதுரத் தமிழர் அழித்து


சதுரம் == பெரிய

எழுதியவர் : பழனி ராஜன் (28-Jan-22, 8:40 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 37

மேலே