இயற்கை இறைவன் இறைவன் இயற்கை

விரி வானம்
எத்துணைப் பெரியது
தெரியாது அளவிடமுடியாதது
வெற்றிடமா ??
இல்லையே; அங்கே குடிகொண்டிருக்கும்
எண்ணில் அடங்கா நட்சத்திர கூட்டங்கள்
கோள்கள் இன்னும் இவையொத்தவை
இவற்றை வயிற்றில் வைத்துள்ள அண்டசராசரங்கள்
அப்பப்பா..... எத்துனைப் பெரியது இவ் வானம்

அதனால் வானம் எல்லையில்லாதது
பிரமிக்கவைக்கிறது அதில் அடங்கி
சுழன்றாடிக் கொண்டிருக்கும்
நட்சத்திராதிகள்....இயக்கம்
எண்ணிப் பார்க்கமுடியவில்லை
இயங்கும் இவை எல்லாம்
ஆடி அடங்கிடும் ஒரு நாள் !

இவற்றின் இயக்கம் எல்லாம்
கணித கணிப்புக்குள்....
அப்படி இருக்க .......
யார் அந்த கணிதமேதை
இவற்றை உருவாக்கி இயங்கவைப்பவன்

இயங்கும் இயக்கத்தில் எல்லாம்
நம் புறக்கங்களுக்கு தெரியா ஒருவன்
இருக்கின்றான் ....இருக்கின்றான்
என்றே கூற வைக்கிறது
நினைத்து சொல்ல வைக்கும் மனம்

இயற்கை எதுவென்றால்....
இறைவன் இயற்கை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (28-Jan-22, 9:57 am)
பார்வை : 130

மேலே