கயல் விளியாள்
உச்சி வேளை
நதியின் பளிங்கு நீரில்
அவள் முகத்தைக் கழுவிக்கொள்ள
அங்கு துள்ளும் கயலகள் கொஞ்சம்
துள்ளுவதை நிறுத்திக்கொண்டதாம்
அவள் முகத்தில் கண்களைக்கண்டு
இவை என்ன 'புதிய கயல்கள்' என்று நினைத்து !