புனிதப் பூ

மனித னானவன் மாக்களைப் போலொரு
மதம்பி டித்தலை கின்றதால் வாழ்வதன்
தனித்து வத்தையும் தானிழந் திங்கவன்
தவறி ழைக்கிறான் தன்னலச் சேற்றினுள்
இனிப்பு டன்தினம் வீழவும் செய்கிறான்
இயற்கைக் கேயெதி ராகவும் நிற்பதால்
புனித மென்கிறப் பூவவன் கால்களில்
பழமை தானெனப் போட்டுமி திக்கவே!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (29-Jan-22, 2:19 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 37

மேலே