உயிர் ஆதாரம் நீர்

ஆல விழுது போல்
அங்கே அங்கே நீர்வீழ்ச்சி
ஊரேங்கும் உன்பேச்சி
கண்ணே ஒருமுறை என்னை
கண்டுவிடு என்னுள்
எழுந்திடும் புது எழுச்சி..!!

விழுந்து ஓடும் நீர்போல
உன்னில் நானும் ஓடுகிறேன்
உன் அடிவாரம் எது என
தெரிந்து கொள்ள..!!

கடலை சேரும் முன் அந்த
நீரின் நிலமை மிக கொடுமையே
உன்னை சேரும் முன்
கொடுமையிலும் கொடுமை
என் நிலமை..!!

உயிரியின் ஆதாரம் நீர்
என்றால் என் ஆதாரம்
நீதான் என் இளம்குயிலே..!!

எழுதியவர் : (2-Feb-22, 9:54 pm)
Tanglish : uyir aathaaram neer
பார்வை : 33

மேலே