கொரோனாவே

உலகமே உன்னை தூற்றும்போது
ஊரெல்லாம் உன்னை கண்டு நடுங்கும்போது
நான் உன்னை பாராட்டுகிறேன்.
கொரோனாவே....
வியப்பாய் இருக்கிறதா?
நீ...நுண்கிருமிதான் - உன்னால்
மரணம் நிச்சயம்தான்.
ஆனாலும் உன்னை கண்டு
ஆச்சரியப்படுகிறேன்.
அவஸ்த்தையும் படுகிறேன்.
உலகையே கட்டி ஆளப்போகிறேன்
நான் சொல்வதுதான்...இனி
என் இஷ்டப்படிதான் எதுவும் இங்கே
என்று இறுமார்ந்து
ஏகாதிபத்தியமாய் இருந்த
அத்தனை பேரையும்
அடக்கி....ஒடுக்கி
வீட்டிற்குள்ளேயே
சிறை வைத்து விட்டாயே...!
சட்டங்கள் இருந்தாலென்ன?
திட்டங்கள் இருந்தாலென்ன?
எதைப்பற்றியும் கவலைகொள்ளாமல்
தான்தோன்றித் தனமாய்
சுற்றித் திரிந்துகொண்டிருந்த.....
யார் எக்கேடு கெட்டாலென்ன
தனக்கு வேண்டியதை
இப்பவே...இந்த நொடியே
அனுபவித்து விடவேண்டும்
என்றலைந்து...சுயநலத்துடன்
சீர்குலைந்து கொண்டிருக்கும்...
உயிர் பயம் சிறுதுமின்றி
"பைக்கில்" சிட்டாய் பறக்கும்...
மற்றவர்களைப் பற்றியும் - ஏன்
பெற்றவர்களைப் பற்றியும்
கொஞ்சம்கூட நினைக்காமல்
மதிக்காமல் போகும் வேகம் ஒருபுறம்
"ஹப்" ..."பப்"...என்று
கேளிக்கை....கூத்துக்கள் ஒருபுறம்
போதைமருந்துகள்...கஞ்சா..மது வகைகள் ஒருபுறம்
காதலியை....நம்பி வந்தவளை
நண்பர்களுக்கு பந்தியிடும்
சமுதாய சீர்கேடுகள் மறுபுறம்
தாய் தந்தையரை மதிக்காமல்
கல்விதரும் குருக்களையும் மதிக்காமல்
காட்டு மிருகமாய்
கட்டுப்பாடுகளை உடைத்த
இந்த இளைய சமுதாயத்தை
வீட்டிற்குள் சிறைப்படுத்தி
கட்டிப் போட்டிருக்கின்றாய்...
தனிமை படுத்திருக்கின்றாய்...
சிந்திக்கவும் வைத்திருக்கின்றாய்...
மனிதாபிமானம் கொஞ்சம் கொஞ்சமாய்
செத்து கொண்டிருந்த கால கட்டத்தில்
பொறுத்தது போதும் என்று
பொங்கி எழுந்து விட்டாயே
கொரோனாவே...!
உன்னை என்னவென்று சொல்வது?
மக்கள் சிந்தனையே சிறிதும்
இல்லாதிருந்த
அரசியல்....அரசாங்கத்தை
அதிகார...அகம்பாவத்தை
அறுத்தெறிந்துவிட்டாயே..
மக்களை அன்றி வேறெதையும்
நினைக்க கூட அனுமதிக்காமல்
முழுநேர வேலையாய்
தெருத் தெருவாய்...வீடு வீடாய்..
மக்களோடு மக்களாய்
இருக்க வைத்துவிட்டாயே.
வியாபாரமாய் மாறிப்போய்
புனிதத்தையே இழந்து ...சிதைந்துபோன
மருத்துவத்தின் புனிதத்தை மீட்டு
அதன் மகத்துவத்தை உலகிற்கு உணர்த்திவிட்டாயே...
கையூட்டு பெற்று..தன்மானத்தை இழந்து
"மாமு...மாமு" என்று ரௌடிகளும் கள்வர்களும்
தோள்மீது கைபோட்டு உலா வந்த
காவல் துறையின் கண்ணியத்தை
மீட்டெடுத்ததில்லாமல்..அவர்களை
கையெடுத்து கும்பிட வைத்துவிட்டாயே...
சட்டத்திற்கு அடிபணியாமல்
தான்தோன்றி தனமாய்
சுற்றித் திரிந்த இந்த கேடுகெட்ட
சமுதாயத்தை
கட்டத்திற்குள் நிறுத்தி
சமுதாய இடைவெளி கண்டாயே..
கோயிகளென்ன..
சர்ச்சுகளென்ன...
மசூதிகளென்ன....
எல்லாவற்றையும் மூடவைத்து
மதங்களினால் பிரிந்திருந்தாலும்
வேற்றுமையில் ஒற்றுமையாய்
தெய்வங்கள் ஒன்றுதான் என
எங்களுக்கு உணர்த்திவிட்டாயே...
பரந்தாமனின் அவதாரம் பத்து
நாங்கள் அறிவோம்.- ஆனால்
உன் அவதார லீலைகளைத்தான்
எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஐந்தறிவு ஜீவன்களின்
ஆதாரத்தை அழித்து
இறுமார்ந்திருந்த
ஆறறிவு ஜீவன்களை
வீட்டிலைடைத்து
ஐந்தறிவு ஜீவன்களை
சுகமாய்....சுதந்திரமாய்...
வீதியில் உலாவவிட்டிருக்கும்
உன்னை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
சுதந்திரத்தின் மூலத்தை
மண்ணில் புதைத்து
எக்காளமிட்ட இத்
தறிகெட்ட சமுதாயத்திற்கு
நீ கொடுத்த அடி சரியான
சம்மட்டி அடி.
அடி கொஞ்சம் பலம்தான்.
என்ன செய்வது?
"அடி உதவுவது போல அண்ணன்தம்பி
உதவமாட்டானே.."
இனியாவது சமுதாயமே விழித்துக்கொள்.
தனித்திருக்கும் இந்நேரம் சிந்தித்து செயல்படு.
சீர்கேட்டை சரி செய்ய சரியான பாதையில் நடைபோடு.
கொரோனாவே...
போதும் உன் கோபம்
எங்களை மன்னித்துவிடு
தனிமை....கொடுமை ...
புரிந்து கொண்டோம்
கூட்டு குடும்பத்தின் மகத்துவம்
சொந்த பந்தங்களின் அருமை
மனித நேயத்தின் பெருமை
மனித உயிர்களின் விலை
உணர்ந்துவிட்டோம்.
எங்களை
தனிமைச் சிறையிலிருந்து
விடுதலை செய்!

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (3-Feb-22, 10:27 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 44

மேலே