தீதும் நன்றும்பிறர் தர வாரா

"தீங்கு புழுதியிலிருந்து உண்டாகிறதுமில்லை...
வருத்தம் மண்ணிலிருந்து முளைக்கிறதுமில்லை."
ஆம்...
எல்லாம் உன்னிலிருந்துதான் உண்டாகின்றன.
வெற்றுத்தாளாய் பூமியில் பிறந்தாய் - நீ
மண்ணில் கால் பதித்தவுடன் அதில்
கிறுக்கப்படும் கிறுக்கல்களால்
பின் வரும் நாட்களில் நீ
கிறுக்கப்போகும் கிறுக்கல்களால்
வெற்றுத்தாள் வீணாய் போகும் நிலை.
ஜாக்கிரதை.
உனக்கொன்று தெரியுமா?
தீதும் நன்றும் பிறர் தர வாரா.
நீ எதை விதைக்கின்றாயோ
அதைத்தான் அறுத்தெடுப்பாய்.
நீ எப்படி பார்க்கின்றாயோ
அப்படித்தான் பார்க்கப்படுவாய்.
நீ எப்படி அழைகின்றாயோ
அப்படித்தான் அழைக்கப்படுவாய்.
நீ எப்படி நினைக்கின்றாயோ
அப்படித்தான் நினைக்கப்படுவாய்.
உன்னை அறிந்து கொள்.
உள்ளத்தை சுத்தப்படுத்து.
கிறுக்கல்களை அழி - நல்ல
சிந்தனைகளை விதை.
சிரிப்பை பயிர் செய்
நிம்மதியை அறுவடை செய்.
எதிர்மறையை களையெடு.
நேர்மறையாய் வாழ்ந்து காட்டு.

எழுதியவர் : (6-Feb-22, 5:07 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 267

மேலே