விந்தைதான்
விந்தைதான்...
எனக்கு உயிர் கொடுத்த
என் தாய் சாதிக்காததை - நீ
சாதித்து விட்டாய். அது
உன்னால் மட்டும்தான் முடியும்.
உன்னால் எங்கோ ஒரு மூலையில்
ஏற்றிவிட்ட நெருப்பால்தான்
என்னிதயம் சிகப்பாய் இருக்கிறதோ என்னவோ.!
உன்னைப் பார்க்கும்போதெல்லாம்
அது உடலெங்கும் பரவி என்னை
நெருப்பாய்ச் சுட்டுப் பொசுக்குகிறது.
நீ...அழகியா? எனக்குத் தெரியாது.
நீ...கண்ணகியா? எனக்குத் தெரியாது?
நீ... மாதவியா? எனக்குத் தெரியாது?
ஆனால்...எனக்கு
நீ...நீயாகவே வேண்டும்.
ஒற்றைப் பின்னல் - அதில்
மனதை ஒற்றியெடுக்கிறாய்.
கருவிழியிரண்டில் காதல்
பாடம் கற்றுக்கொடுக்கிறாய்.
இரண்டுங்கெட்டான் நிலையில் என்னை
இறக்கி விட்ட தேவியே
இன்னும் என்ன செய்யப் போகிறாய்?
நமக்குள் நடக்கும்
இந்த ஊமை நாடகம்
இன்னும் எத்தனை நாளைக்கு?