என் காதல் கண்மணி

காதல் கடலில் மூழ்கி
முத்தெடுப்பது அவ்வளவு
சுலபம் இல்லையென்று
தெரிந்து தான்

விளக்கினை சுற்றி வரும்
விளக்கு பூச்சியைப்போல்
உன்னை சுற்றி சுற்றி
நான் வலம் வந்து
காதல் கடலில்
சிக்கி தவிக்கிறேன்...!!

காதல் கடலில் சிக்கி
தவிக்கும் என்னை
வேடிக்கை பார்க்காமல்
கை தூக்கி கரை சேர்த்து விடு
என் காதல் கண்மணியே...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (10-Feb-22, 3:50 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : en kaadhal kanmani
பார்வை : 372

மேலே