பாசண்டி மூடமாய் நல்லவரால் நாட்டப் படும் - அறநெறிச்சாரம் 63

நேரிசை வெண்பா
(வேலொடு – ல் மேல் ஒ உயிரெழுத்து ஏறி எதுகையாகிறது)

தோல்காவி சீரைத் துணிகீழ் விழவுடுத்தல்
கோல்காக் கரகம் குடைசெருப்பு - வேலொடு
பல்லென்பு தாங்குதல் பாசண்டி மூடமாய்
நல்லவரால் நாட்டப் படும் 63

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

தோல் கல்லாடை மரவுரி துணி இவைகளைக் கீழே விழுமாறு உடுத்தலும், தண்டு காவடி கமண்டலம் குடை செருப்பு வேல் பல் எலும்பு இவற்றை மேற்கொள்ளுதலுமாகிய இவை புறச் சமயிகளது அறியாமையாகப் பெரியோர்களால் சொல்லப்படும்.

குறிப்பு:

தோல்-புலித்தோல், மான்தோல் முதலியவற்றாலாகிய ஆடை. துணி-நூலாடை. கல்லாடை-காவியுடை. கீழ் விழ உடுத்தல் - பாதங்கள் வரை படியுமாறு கட்டிக்கொள்ளுதல், பல் எலும்பு-பற்களாகிய எலும்பு அன்றி, புலிப்பற்களும் மக்களுடலெலும்புமாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Feb-22, 4:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

மேலே