இவன் குரு..!!
இன்ப துன்பங்களை
எழுத்திலே மறைக்கும்
கவிஞன்களில் இவனும்
ஒருவன் குரு..!!
எண்ணத்தை எழுத்திலே
புகுத்தி வலியை
வன்மம் இல்லாமல்
வடிக்க தெரிந்தவன் நான்..!!
என் பெரும் காயத்தை - கூட
சிறு வார்த்தைகளிலே
சொல்ல தெரிந்தவன்
இவன் குரு..!!
இவனை பெரிதாக
ஏற்று கொள்ளாத போதும்
கண்ணீரை கலங்காமல்
கவிதைக்குள் வைத்து விடுகிறான்
இவன் குரு..!!