துள்ளும் காலம் வரை
நண்பா மனசாட்சி
நல்லதையே நீ யோசி
வாழ்வில் எதுவென்றாலும்
வளத்தினை நாட யோசி
உண்மையின் நிலையிலிருந்து உள்ளதை நீ நேசி
உலகின் நல்லதெல்லாம்
உனக்கென நீ யோசி
துள்ளும் காலம் வரையில்
துவளாது வாழ யோசி
கல்வியின் எல்லை வரையில்
கற்றிட வேண்டும் நேசி
திட்டத்தை திடமாக்கி
வென்றிட வேண்டும் ஆசி
எத்தகை அல்லல் என்றாலும்
அத்தனையும் உனக்கு தூசி
கட்டுப்பாடின்றி சுற்றினால்
கெட்டுவிடும் உடலும் கூசி
---- நன்னாடன்.