ஜாதிகள் இல்லையடி பாப்பா

ஜாதிகள் இல்லையடி பாப்பா
என்று குழந்தைகளுக்கு
சொன்னான் பாரதி

ஆனா ...இதில் வருத்தம்
என்னவென்றால்
ஜாதிகளின் பிறப்பிடமே
குழந்தைகள் படிக்கும்
பள்ளிக்கூடமே ...!!

ஆம் ...
ஆரம்ப பள்ளிக்கூடத்தின்
விண்ணப்ப படிவத்தில்
ஆரம்பமாகின்றது
ஜாதிகளின் ஆதிக்கம் ...!!

இதன் வளர்ச்சி
வன்முறையில்
வீழ்ச்சி பெறுகிறது ..!!

மேடையில் முழங்கும்
அரசியல் வர்க்கமும்

ஜாதி பிரச்சனை என்று
வரும் பொழுதெல்லாம்
வாய்மூடி மௌனம் காத்து

சமூக சீர்திருத்தம்
தேவையென்று சொல்லும்
சிந்தனையாளர்களை
பார்வையற்ற
பார்வையாளர்களாக
மாற்றி விடுகிறார்கள் ...!!

காலங்கள் மாறும் என்று
காத்திருப்பதில் அர்த்தமில்லை
மாற்றத்தை உருவாக்க
மக்களாட்சி என்று சொல்பவர்கள்

முதலில் ஆரம்ப பள்ளியின்
விண்ணப்ப படிவத்தில்
என்ன ஜாதி என்ற பகுதிக்கு
முற்றுப்புள்ளி வைக்கட்டும் ..!!

இந்தியன் என்று சொல்வோம்
அந்த இனிய சொல்லில்
பெருமிதம் கொள்வோம் ,,,!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (17-Feb-22, 1:43 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 349

மேலே