நித்திரை வரவில்லை

நித்திரை வரவில்லை

நித்திரைக்குள்
செல்லத்தான் நினைக்கின்றேன்
நினைவுகள் நெஞ்சினில்
மோதுவதால்
இமைகள் மூடத்தான்
மறுக்கின்றன

எதிர் வீட்டு
சிறு கட்டிடத்தை
என் பெயரில்
மாற்றிக்கொள்ள
ஏராளமாய் திட்டங்கள்
போட்டு வைத்து

நாளை எழுந்தவுடன்
செயல்படுத்த
நினைத்திருக்கிறேன்

வருமானம் குறைவு
இல்லை
வாழும் வீடோ
மாடமாளிகை

வசதியாய் படுத்துறங்க
விலையுயர்ந்த
கட்டில் மெத்தை

இருந்தாலும்
மூடிய இமைகளை
வலுக்கட்டாயமாய்
நிமிர்த்தி வைக்கிறது
என் கண் மேடுகள்

மனம் வெறுத்து
எழுந்து வந்து
கதவை திறந்தவன்

எதிரில்
சிறு கட்டிடம்
சிதிலமடைந்த வாசல்

வாசல் தளத்தில்
நிம்மதியாய் தூங்கி
கொண்டிருக்கும்
அன்றாட காய்ச்சிகள்

நாளை இவர்களுக்கு
இந்த இடம்
சொந்தமில்லை

சொந்தம் கொள்ள
போகிறவனுக்கு
தூக்கம் போன
இடம் தெரியவில்லை

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (21-Feb-22, 1:25 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 235

மேலே