அம்மாவுக்கு வாழ்த்து.

எங்கள் மூவருக்கும்
நீ கிடைத்தது -
இந்த தினத்தால்.
என் வாழ்க்கை
நான் வாழ்வது -
இந்த தினத்தால்.
நான் மகவுகள்
ஈன்று மகிழ்வது -
இந்த தினத்தால்.
தமக்கை வாழ்க்கை
இன்று சிறப்பது -
இந்த தினத்தால்.
தேசியம் நான் நீ
உரைக்க நான் கற்றது -
இந்த தினத்தால்.
இத்தனை பெருமை
இந்த நாளுக்கு -
அம்மா !
நீ பிறந்ததால்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
இப்படிக்கு,
இந்த நாளால்
பயனடைந்த உம் மகன்.

எழுதியவர் : சோனி ஜோசப். (3-Oct-11, 4:10 pm)
சேர்த்தது : Sonu Joseph
Tanglish : ammavuku vaazthu
பார்வை : 345

மேலே