ஓடி வந்து பார்த்தேன்

சிறுவயதிலிருந்தே
இணை பிரியாத நண்பர்கள்
இருவரும் அறிஞர்கள்
சிறந்த சொற்பொழிவாளர்கள்
ஒருவர் ஆன்மீகவாதி,
அடுத்தவர் நாத்திகர்—இவர்
மதங்களையும், கடவுளையும்
மதிக்காத மனிதர்

நண்பர்களாக இருந்தும்
நடந்து போன தேர்தலில்
வெவ்வேறு கட்சிகளில் நின்று
போட்டியிட்டனர்—அதில்
பாதிக்கப்பட்டவர் நாத்திகர்
தோற்றதால் நிலை குலைந்தார்
மருத்துவ மனையில் சேர்த்து
மரணப்படுக்கையில் இருப்பதை
அறிந்த பால்ய நண்பர்

அவசரமாக நாத்திக நண்பரை
மருத்துவமனையில் போய் பார்த்தார்,
சாகும் தருவாயில் என்னை
சந்திக்க வந்ததற்கு நன்றி என்றார்,
அதற்கு பால்ய நண்பர் சொன்னார்
“ நான் செத்தால் ஏனைய நண்பர்களை
சொர்க்கத்தில் சந்திப்பேன்,--உங்களை
அங்கு சந்திக்க இயலாததால் ஓடி வந்து
இங்கு பார்த்தேன் “ என்றார்

எழுதியவர் : கோ. கணபதி. (25-Feb-22, 2:08 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 57

மேலே