கோவை சுபா எனும்

நீயில்லா இரவில் நித்திரை போனது
நோயில்லா உடலும் நொந்து ஆனது

வாயில்லா உயிரும் வாடி போனது உனைத்தேடி தான் ஓடி திரிந்தது என்மனதுடன் அதுவும்

நாய்க்கு நீவைத்த பெயர்தான் மறந்து போனது ..அது உணவை உண்ண மறுத்து ஏங்கிப்போனது

வாழ்க்கை துணையாக வந்தவளே
வாழ இணையாக நின்றவளே ...

அம்மா வீட்டிற்குநீ அசதியில் சென்றிருந்தால் ...அசடுவழிய அங்கு நின்றிருப்பேன் ...இந்நேரம்.

கோபம் வேண்டாமடி என்கண்ணே
தாபம் தவிர்ப்பாய் பெண்ணே

குடும்பத்தில் வருவதுதானே குழப்பம்... அதில் நீதெளிவு கொள்வதில் தானே உள்ளது நம்விருப்பம் ...

நானும் எத்தனை முறை தானடி சொல்வது ....

எழுத்து. காம் இல் கோவை சுபா என்பது கவிஞர் என்று ...அவர் என் ஆண் நண்பர் என்று ....

நட்பில் நாங்கள் வாழ்வோம் என்று...
நுட்ப அறிவில் நுழைவோம் என்று...


அறிந்தும் தானே சென்றாய் ...
அம்மா வீட்டிற்கு செல்ல ...

இன்னும் ஓர் பொய் காரணம் தனையே மெய் ஆக்கி ...

இந்த பெணகளுக்கு மட்டும் தான் காரணம் எங்கெல்லாம் கிடைக்குமே.


இக்கவிதை கோவையார் சுபா அய்யா அவர்களுக்கு சமர்ப்பணம் ...

எழுதியவர் : பாளை பாண்டி (26-Feb-22, 6:00 am)
சேர்த்தது : பாளை பாண்டி
பார்வை : 156

மேலே