இனிய சிறை காதல்

இனிய சிறை காதல்
~~~~~~~~~~~~~~~~

இதுவரையில் சிறைப்பட்டதே இல்லை/
இவளிடம் ஏனோ சிறைப்பட்டுவிட்டேன்/
இதுவெல்லாம் புதியதாக தோன்றுகிறது/
இப்பிரபஞ்சமே காதல்சிறையாக மாறுகிறது /

இயற்கையிற்கு முரணா அவள் ?/
இயற்கையிற்கு முரணா காதல் ?/
இருப்பில் கிடந்த உடல் கூட /
இயந்திரத்தின் வேகத்தையே மிஞ்சுகிறதே /

இதயம்கூட இடம்மாறி தவிக்கிறதோ /
இதயத்தில் நின்றவளே இடைவெளியின்றி /
இதழின் நற்சொல்லால் காதலைசொல்லடி /
இதயத்தின் சிறையிற்கு காதல்பூட்டு ஏனடி /

இப்பேரண்டத்தில் நம்காதலை எஞ்சியவர்யாரடி /
இரவில் கதைப்பேசி நிலவிடம்தூதுவிட்டோம் /
இருள்மையாய் கசக்கி எடுத்து /
இருளுக்கே சிறைப்போட்டோம் /

இமையே இமைக்காமல் ஆழிப்பேரலையை /
இமைக்குள்ளே காதலாய் கொண்டுவந்தோம் /
இடைவிடாத காதல் புயலால் /
இறைவனையே கலங்க வைத்தோம் /

இருவரின் விரல்கூட தீண்டாமல் /
இருதயத்தின் சுவாசக்காற்றால் தீண்டிக்கொண்டோம் /
இடையிடையே காதலுணர்விற்கு விருந்துவைத்தோம் /
இலக்கியத்தை மொழிப்பெயர்த்த காதலும் -நம் /
இருவரின் காதல் தானடி ..!

தமிழோடு என்றும் ம.சந்தோஷ் சபரி
௯௭௮௭௨௭௧௯௪௭

எழுதியவர் : ம.சந்தோஷ் சபரி (26-Feb-22, 7:16 pm)
சேர்த்தது : SABARI 978727
பார்வை : 267

மேலே