கண்ணில் கயவர் கருத்துணர்ந்து கைமிக நண்ணி நலனுடைய செய்பவேல் - பழமொழி நானூறு 74

இன்னிசை வெண்பா

கண்ணில் கயவர் கருத்துணர்ந்து கைமிக
நண்ணி அவர்க்கு நலனுடைய செய்பவேல்
எண்ணி இடர்வரும் என்னார் புலிமுகத்(து)
உண்ணி பறித்து விடல். 74

- பழமொழி நானூறு

பொருளுரை:

கண்ணோட்டம் இல்லாத கீழ்மக்களது எண்ணத்தை அறிந்து மிகவும் விரும்பி அவரையடைந்து அவர்க்கு வேண்டிய நன்மைகளைச் செய்வாராயின்,

அங்ஙனம் செய்தல் துன்பம் வரும் என்பதை ஆராயாதவராய் இருப்பவரின் செய்கை, இரக்கத்தால் புலியினது முகத்தின்கண் உள்ள உண்ணியை எடுத்துவிடுதலோடு ஒக்கும்.

கருத்து:

தீயவர்களுக்கு நன்மை செய்தல் தனக்குக் கேடு தேடிக்கொள்ளுதலாக முடியும்.

விளக்கம்:

புலிமுகத்து உண்ணி பறிப்பார் எங்ஙனம் பிழையாரோ, அதுபோன்றே தீயவர்களுக்கு உதவி செய்வாரும் பிழைத்தல் இலர்.

'புலிமுகத்து உண்ணி பறித்துவிடல்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Mar-22, 3:17 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

சிறந்த கட்டுரைகள்

மேலே