செங்கோள் தலை

வெள்ளொத்தாழிசை

எதற்காக இப்புவி ஆக்கமும் பெற்றதோ
இக்கோளில் காற்றுடன் ஆதவன் சுள்ளென்று
சூடாய் ஒளிர்ந்த படி

உயிராய் வளரும் எவையும் செழிப்பாய்
உயர்வெய்ய ஊக்கம் கொடுக்கும் வகையில்
உயிருக்கு செங்கோள் தலை

மழையாய் ஒழுகிடும் நீரும் உயர்ந்திட
வன்மையாய் செங்கதிரின் ஊக்கமே யுக்தியாய்
செய்தது ஆதியின் நே (அருள்)
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (9-Mar-22, 6:02 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 27

மேலே