சங்கஞ்செடி - புங்கமரம் - இவைகளின்பால் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சங்கம்பால் வீக்கமதைத் தான்போக்கும் நீர்வடிக்கும்
அங்குசுரம் வெப்பகற்றும் ஐயமிலை - கொங்குலவு
புங்கம்பால் புண்ணாற்றும் பொல்லாத வாய்வகற்றுந்
தங்கம்போல் மெய்யளிக்குந் தான்

- பதார்த்த குண சிந்தாமணி

சங்கன் வேர்க்கட்டையைச் சீவிப்பிழிந்த பால் வீக்கம், நீரேற்றம், சுரம் இவற்றை நீக்கும்; புங்கமரப் பால் விரணத்தை நீக்கி வாய்வினை அகற்றி உடற்பொலிவை உண்டாக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Mar-22, 6:55 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

மேலே