கண்ணனும் ராதையும்

கண்ணனின் கைகளில் புல்லாங்குழல்
கண்ணன் பவள வாய் அதைத் தழுவ
அதிலிருந்து சாம கானம் 'ராதே' 'ராதே' என்று
மெல்ல மெல்ல எழுந்து விண்னைப் பரப்பியது

கண்ணன் குழலை ராதை இடம் தந்தான்
ராதை கேட்க.....ராதை அதை தன்
தாமரை இதழ்கள் கொண்டு தழுவ
அதிலிருந்து மீண்டும் எழுந்தது சாம கானம்
'கண்ணா' ' கண்ணா' என்று தென்றலுடன் கூடி
மண்ணிலுள்ளோர் கேட்டு மகிழ

கண்ணனும் ராதையின் குழலோசைக் கேட்டு மகிழ

கண்ணன் இல்லை எனில் ராதையும் இல்லை
கண்ணனில் ராதை என்றும் வசிக்கின்றாள்
அதனால் அவன் 'ராதா கிருட்டிணன் '

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Mar-22, 5:18 pm)
பார்வை : 238

மேலே