எள்ளுநெய் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
புத்திநய னக்குளிர்ச்சி பூரிப்பு மெய்ப்புளகஞ்
சத்துவங் காந்தி தனியிளமை - மெத்தயுண்டாங்
கண்ணோய் செவிநோய் கபாலவழல் காசநோய்
புண்ணோய்போம் என்னெய்யாற் போற்று
- பதார்த்த குண சிந்தாமணி
அறிவு தெளிவு, விழிக்குளிர்ச்சி, மனமகிழ்ச்சி, உடல்பலம், அழகு இவை எள்நெய்யால் உண்டாகும்; கண்நோய், செவிநோய், கபால அழல் நோய், காசநோய் இவை நீங்கும்