கலப்பை விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

நேரிசை வெண்பாக்கள்

தொந்தியில் லாத கலப்பை விநாயகனை,
எந்தவித நோயின்றி எந்நாளும் - தந்தைபோல்
நம்மைக் கருத்தாக நானிலத்தில் காப்பவனை
செம்மையாய் என்றும் வணங்கு! 1

கலப்பை விநாயகனைக் காணுங்கால் வேண்டும்
நலமே நமக்கெல்லாம் நல்கி - பலமும்
வளமும் பழுதின்றி வாழ்த்தி யருளி
அளவிலாஆ னந்தமளிப் பான்! 2

விநாயகர் பட உதவி - தினமலர்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Mar-22, 2:50 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

மேலே