அவளின் விழிகள்

என்னைக் கொல்ல கத்தி எனடி
உன் இருண்ட விழிகள் போதுமே
என் இதயத்தை இரண்டாய் பிளக்க
உன் சுவாசம் போதுமே

என் இதயத் துடிப்பை நிறுத்த உன்
தொடுதல் போதுமே
என் இரத்தம் சட்டென்று நிற்க
அடியே உன் ஒரு வார்த்தை போதுமே


இம்மண்ணில் சொர்க்கம் நரகம்
இரண்டையும் நான் பார்க்க
மொத்தத்தில் நீ ஒருவள் போதுமே
இந்த பிறப்பினை நான் முடிக்க..!

எழுதியவர் : மாறன் வைரமுத்து (26-Mar-22, 11:31 am)
சேர்த்தது : மாறன் வைரமுத்து
Tanglish : avalin vizhikal
பார்வை : 1501

மேலே