அன்னையே சரணம்

" கனியென இனிப்போளே!
பிணிதனை தணிப்போளே!

'மணியென' தமிழிசையில்
நின்னைத் துதித்தால்,
'அணியென' மகிழ்ந்து அதை
ஏற்று தன்னை தருபவளே!

'தனியென' இப்பூவுலகில் வாடி நிற்ப்போரை,
இனிதொரு' துணையேன நாடி வருபவளே!

துயர் இருளில் 'அமிழ்ந்து '
உன்னை தேடி வருவோர்க்கு,
அருளொளி 'அமிழ்து' தன்னை
தர ஓடி வருபவளே,

தேவி உன்னை 'சரணடைந்தேன்',
தாவி வந்து என் 'அரண்'
ஆவாய். "

எழுதியவர் : (28-Mar-22, 10:25 am)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 195

மேலே