திரைப்படங்களிலே

நிலைமண்டில ஆசிரியப்பா

பேருந்தில் மகிழுந் திலேயே பாடவே
திரைப்படங் களிலே பாடலெல் லாமுமே
முறையாய் இசையமைத் துயெடுத் தபடி
விரைவாய் இங்கே கொடுக்கின் றனரே .

கருத்தால் பலரையும் திருத்திய பாடலும்
சிறுத்தே வெறுப்பையும் பொருந்தா ஒலியையும்
பொருந்தி இன்று பாடலாய் வெளிவர
சிறப்பை இழந்த கவிதையாய் குன்றியே

தமிழ்மொழி யதுவின் ஆழந் தெரியா
கூழைமுட் டைகளே இன்று பாடலை
இயற்றிட எழுதுகோல் பிடித்தே மிடுக்காய்
இசைக்கு எழுது கிறார்கள் எதையோ

ரகரமும் றகரமும் அறியாப் பாடகர்
நகரமும் ணகரமும் னகரமும் புரியா
வண்ணமாய் ஒலியை வாயால் செய்தே
ழகரம் அழுதிட படிக்கிறார் பாடலை

எரித்திட அமைதியாய் இருக்கும் நெருப்பு
பெரியதாய் தவறது ஆகையில் தமிழரும்
தமிழினைக் காக்கவே நெருப்பென மாறியே
சிதைக்கும் கயவனை அழிப்பர் உறுதியே
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (30-Mar-22, 10:09 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 24

மேலே