கொட்டைக் கரந்தை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

கொட்டைக் கரந்தைதனைக் கூசாமல் உண்டவர்க்கு
வெட்டை தணியுமதி மேகம்போந் - துட்டச்
சொறிசிரங்கு வன்கரப்பான் தோற்றாது நாளும்
மறிமலமுந் தானிறங்கு மால்

- பதார்த்த குண சிந்தாமணி

வெள்ளை மேகம், சொறி, சிரங்கு, கரப்பான், மலக்கட்டு ஆகியன கொட்டைக் கரந்தையால் நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Mar-22, 3:27 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே