காதல் பரவசம்

பார்க்க பார்க்க
பார்க்க தூண்டும்
பால் முகம்
உன் முகம்
வான் நிலவே!
கேட்க கேட்க
கேட்க தூண்டும்
இனிய குரல்
உன் குரல்
கவிக்குயிலே!
முகர முகர
முகர தூண்டும்
பூ வாசம்
உன் வாசம்
பரவசம்!
நகர நகர
தொட தூண்டும்
எந்தன் நீ
தென்றல் நீ
என்றென்றும்!
சுவைக்க சுவைக்க
சுவைக்க தூண்டும்
அறுசுவையை மிஞ்சிய
தனிச்சுவை
உன் உதடு!
உணர உணர
உணர தூண்டும்
நீயென்பது நானென்றும்
நானென்பது நீயென்றும்!