கவிதை பற்றிய கட்டுரை

கவிதை எழுதுவது ஒரு கலை அதை இல்லை எனக் கூற இலை!
ஆனால் எந்த காலத்திலும் ஒரே கவிஞன் மட்டுமே இருப்பதில்லை!
ஒன்றுக்கு நூறு என கவிஞர்கள் எல்லா இடங்களிலும் வசிப்பதில் குறைச்சல் இல்லை!
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இருந்தபோது புதுக்கோட்டையில் கல்யாணம் ஆகாத கவிஞர்கள் சிலரும் இருந்திருப்பார்கள்!
ஆயினும் அவர்களுக்கு தம் கவிதைகளை வியாபார ரீதியாக வெளிக் கொண்டு வர மனமில்லை, இல்லை தெரியவில்லை!
கண்ணதாசன் இருந்த காலத்தில் அவருக்கு அண்ணதாசன் கவிஞர்கள் சிலரும் நிச்சயமாக இருந்திருப்பார்கள்!
ஆயினும் கண்ணதாசனுக்கு நல்ல வேளை பிறந்ததால் கவிதை வேலையும் அவருக்கு சினிமாவில் அமோகமாக கிடைத்தது!
கண்ணதாசன் கவிதைகளை படைத்துக் கொண்டிருக்கையில், மாயவநாதன் என்ற அருமையான கவிஞர் சினிமாவில் தலையை காட்டினார்!
"சித்திரப் பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ"என்ற திரைப்பாடலை உன்னிப்பாக கேட்ட தமிழ் ரசிகர்கள் அது போன்ற, தமிழின் அழகை சித்தரிக்கும் இன்னொரு பாடலை கேட்டிருக்கவே முடியாது!
கண்ணதாசன் மற்றும் அவருக்கு ஓரளவு ஈடு கொடுத்த கவிஞர் வாலியும் கூட இந்த மாதிரி ஒரு பாடலை எழுதவில்லை!
கவிஞர் மாயவநாதன் அதிகம் கௌரவம் தன்மானம் கொண்டவர் என்பதாலேயே திரையுலகில் வெற்றிக் கொடி நாட்ட தவறிவிட்டார் என்று கேள்வி!
கண்ணதாசன் கவிதைகளின் சிறப்பு ,வாழ்க்கை தத்துவம் என்றால், வாலியின் கவிதைகள் படைப்பு காதல் மந்திரம்!
கண்ணதாசன் வாலி இன்று இல்லை,!ஆயினும் அருமை தமிழ் கவிஞர்கள் இன்றும் இல்லாமல் இல்லை!
வைரமுத்து தொடங்கி காத்தமுத்து வரையில் நிறைய கவிஞர்கள் இன்று கவிதை புனைகிறார்கள்!

காலத்தின் மாற்றம், மனிதர்களின் மன மாற்றம், வெள்ளித் திரையில் நடக்கும் நம்பமுடியாத கோலங்கள் காரணமாக அன்று புனையப்பட்ட கவிதைகளுக்கும்
இன்று எழுதி தள்ளப்படும் மெட்டுக்கேற்ற பாடல் வரிகளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கிறது! என்ன செய்வது?

வேறு என்ன செய்வது! தலையைத் தடவுவது, கைகளை பிசைவது, என்னைப் போன்ற கவிதை கொலைஞர்களின் கவிதை என கூறி வெளியிடும் கவிதை அல்லாத கதைகளை கவிதை பகுதியில் சாய்ந்து படித்து ஓய்ந்து போவது! வேறு என்ன செய்வது?

எழுதியவர் : ராம சுப்பிரமணியன் (6-Apr-22, 10:45 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 1307

மேலே