காரிகையே

என் முன்னே !
ஓர் ஆளுயரப் பூ,
ஒற்றை வண்ண வானவில் !
உளி படாத சிலை,
கனவுலக காரிகை !

குளிரொளி வீசும் கண்கள்,
குயிலொலி பேசும் மொழிகள் !

கிளியின் மூக்கிற்கு
வண்ணம் போதவில்லையாம்
உன் இதழ் கொடு - பிரம்மன்
வரைந்து மிச்சம் கொடுக்கட்டும் !

அலங்காரம் செய்த
உன் அழகைக் கண்டு
பிரம்மன் வைத்த
திருஷ்டிப் போட்டு
உன் கழுத்து மச்சம் !

வற்றா வளமும்
வளரா இடமும்
அருகருகே முரணாக !

உனதங்கம் வர்ணிக்க
அந்தரங்கம் வேண்டுமடி !
நண்பன் காதிலே
ராத்திரிக்கு சேர்த்திடுவேன் !

கடுந்தவம் புரிந்தேனும்
வயதாகா வரம் கேட்டு
வாங்கி வந்துனக்களிப்பேன் !
உலகின் சிறந்த கவி
ஓர் நாள்
உனைக் கண்டு கசிந்துருகி
கவிதை ஒன்று படைத்திடவே !

- நா முரளிதரன்

எழுதியவர் : நா முரளிதரன் (8-Apr-22, 7:38 pm)
சேர்த்தது : நா முரளிதரன்
பார்வை : 1270

மேலே