வாடிக்கை
விதைதனை விதைத்து
உரம்...நீர் பாய்ச்சி
பருவம் வந்தவுடன்
பச்சை பசேலென....
துளிர் விடும்
இளம் தளிர் கண்டு
மகிழ் கடலில்
மூழ்கும் பொது
அந்தோ.....
ஆடு வந்து மேய்ந்ததுவே
சிறு தளிரும் இரையாய்
துவண்டு சாய்ந்ததுவே.
தளிர் பசுமையாய் இருந்தது
அந்த செடியின் குற்றமா? - பின்
ஆடு வந்து மேய்ந்ததுவே அது
அந்த ஆட்டின் குற்றமா?
இது யார் குற்றம்?
யார் குற்றமும் இல்லை - இது
இயற்கையின் சாபம்.
போட்ட வேலிக்குள்
அடங்கி கிடந்திருந்தால்
ஓங்கி ஆலமரமாய்
வளர்ந்திருக்கலாமன்றோ....!
கட்டுக்குள் இருக்கும் வரைதான்
செடிக்குப் பாதுகாப்பு.
கட்டுகள் உடைத்து
வேலி தாண்டும்போது
கள்ள ஆடுகளுக்கு
பலியாகும் பரிதாபம்.
விதையிலிருந்து செடியா? - இல்லை
செடியிலிருந்து விதையா?
விடுகதைக்குள்
விளங்காத புதிர்தான்
வாழ்க்கை.
அதை தேடி
அலைவதுதான் நமக்கிங்கு
வாடிக்கை.

