இறுதியில் எனக்கும் எனக்கும் தான்

இது வரை வாழ்ந்த காலங்களில் எவ்வளவு பேரை பார்த்திருப்பேன்!
இதுவரை எவ்வளவு மனிதர்களிடம் உண்மையாக பழகியிருப்பேன்!
எத்தனை பேர்கள் என்னை ஆசை காட்டி பின்னர் ஏமாற்றினார்கள்!
எத்தனை துன்பங்கள் எப்பேர்ப்பட்ட இன்னல்களை நான் கண்டேன்!
பணம் இல்லை என்று எவ்வளவு நாள் குணம் இழந்து மனம் உடைந்திருப்பேன்!
பணம்தான் வாழ்வின் லட்சியம் தவிர குணம் இல்லை என்று எவ்வளவு பேர்கள் லட்சியத்துடன் வாழ்கிறார்கள்!
நண்பர்கள் பல கொண்டு இப்போது நண்பர் ஒருவர் கூட எனக்கு இல்லை என்ற என் நிலையை யார் அறிவார்கள்?
விதியை நம்பி விதிமுறைகளை மீறி நடந்து இப்போது விதியிடம் எப்படி வசமாக சிக்கிக் கொண்டிருக்கிறேன்!
ஒவ்வொரு மனிதனை பார்த்து பேசி பத்து நிமிடத்தில் அவரை எவ்வளவு புரிந்து கொண்டு விடுகிறேன்!
ஒரு சில அன்பான நபர்களைத் தவிர அதிகபட்ச மானவர்கள் என் வழிக்கு ஏற்றவர்கள் அல்ல என்ற ஆராய்ச்சியில் எப்படிப்பட்ட வெற்றியை அடைந்தேன்!

என்ன நடப்பினும் அதை ஏற்றுக் கொண்டு, என்ன ஆனாலும் மீண்டும் மீண்டும் தைரியமாக வாழ்ந்து கொண்டு எனக்கு நானே சில சமயங்களில் எதிரியாக இருப்பினும், மகிழ்ச்சியாக இருக்க எனக்கு நானே தான் உற்ற நண்பன் என்பதை பரிபூரணமாக உணர்ந்து இப்போது எப்படி அருமையாக வாழ்ந்து வருகிறேன்!

எழுதியவர் : ராம சுப்பிரமணியன் (10-Apr-22, 5:06 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 60

மேலே