தித்திப்பு
தித்திப்பு என்றாலும்
திணித்தால் இனிக்காது
அது கசக்கும் ...!!
சில நேரங்களில்
வன்முறை போல்
வெறுப்பாக தெரியும் ..!!
மென்மையாக
சுவைத்தால் மட்டுமே
இனிப்பும் இனிக்கும்..!!
அதுபோல் தான்
மனிதனின் வாழ்க்கையும்
எண்ணம் போல் வாழ்க்கை
என்பது நம் முன்னோர்களின்
அனுபவ பழமொழி ...!!
--கோவை சுபா