வேலிப்பருத்தி இலை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
(’வி’ ‘லி’ இடையின எதுகை)

ஆவித்(து) எழுந்தநோய் அத்தனையுந் தீருமே
வேலிப் பருத்தியதின் மெல்இலையால் - வேலொத்துக்
கண்டிக்கும் வாதங் கடுஞ்சந்தி தோஷமும்போம்
உண்டிக்கும் வாசனையாம் ஓது

- பதார்த்த குண சிந்தாமணி

நேரிசை வெண்பா
(’த்’ ‘ற்’ வல்லின எதுகை)

உத்தா மணியிலையால் உள்வயிற்றுக் குன்மமொடு
குத்தாம் வலியுங் குளிரும்போம் - பற்றி
இசிக்கும் வலியிரைப்பும் எத்தடிப்பும் ஏகும்
பசிக்குமதி மாந்தமும்போம் பார்

- பதார்த்த குண சிந்தாமணி

இவ்விலை வாதம், சன்னி, முத்தோடம் வாதகுன்மம், சரீரக் குடைச்சல், குத்தல், நடுக்கல், தனுர்வாதம், சுவாசம், பலவிதத் தடிப்புகள் அக்கினிமாந்தம் இவற்றை நீக்கி பசியை உண்டாக்கும் .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Apr-22, 3:16 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

மேலே