தரா இலை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

புண்கிரந்தி கட்டிபொரு சந்தி கிடமும்போங்
கண்புகைச்சல் காசங்க திக்குமென்பார் - பெண்களுக்குப்
பாலும் பெருகுமுள்ளே பற்றுதிரச் சிக்க(ல்)விடும்
ஏலுந் தராவின் இலைக்கு

- பதார்த்த குண சிந்தாமணி

இவ்விலை புண், கிரந்தி, வித்திரிதிக்கட்டி, சன்னி, எரிகிருமி, உதிரச்சிக்கல் இவற்றைப் போக்கும்; கண்புகைச்சல், கண்காசம், முலைப்பால் விருத்தி ஆகியனவற்றை உண்டாக்கும் .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Apr-22, 3:21 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35

மேலே