கத்தரிக்காய் - அதன்பிஞ்சு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

கத்தரிக்காய் பித்தங் கனன்றகபந் தீர்த்துவிடுந்
தொத்து சொறிசிரங்கைத் தூண்டிவிடும் - மெத்தவுந்தான்
பிஞ்சான கத்தரிக்காய் பேசுமுத்தோ ஷம்போக்கும்
மஞ்சார் குழலே வழுத்து

- பதார்த்த குண சிந்தாமணி

இது பித்தத்தினால் வந்த கபத்தை நீக்கும்; புண்ணையும் கிரந்தியையும் அதிகப்படுத்தும்; பிஞ்சு திரிதோடத்தை விலக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Apr-22, 8:35 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 11

மேலே