காட்டுப்பழு பாகல் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

போசனமுட் செல்லும் பொருந்துபசி உண்டாகுங்
காசபித்த வாதமிகக் காணாவாம் - நேசமுற
வாட்டுப் படாக்கொங்கை மாதே குறிஞ்சிநிலக்
காட்டுப் பழுபாகற் காய்க்கு

- பதார்த்த குண சிந்தாமணி

இது அன்னத்தைச் செலுத்தி நல்ல பசியை உண்டாக்கும்; இருமலால் ஏற்பட்ட பித்த வாதத்தை நீக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Apr-22, 9:48 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

மேலே