காதலை வளர்க்கும் வழியாயிது

பாஃறொடை வெண்பா

சிவனைத் தொழுதுநல் லில்லறம் செய்யும்
தவசீலர் தானே யுமதுத் தமிழர்
படிப்பாய் இரவினில் பாரதம் ஐயோ
இடிப்பாய் பகலில் இராமனின் கோயில்
தமிழின் பெயரில் பாட்டைக் கிறுக்கி
தமிழைத் இழித்துடன் தாழ்த்தும் பதரே
உனக்குத் தெரியா உலகாம் தமிழும்
எனக்குத் தமிழும் தெரியாக் கடலப்பா
கற்றனள் ஒளவையும் கைமண் தமிழதையும்
விற்றுமே காசாக்கி தின்ன சினிமாவில்
புற்றீச லின்று புகுந்து பறக்குதெங்கும்
நற்றமிழை போற்றுவாய் நன்று


இந்தியாவே வேண்டா திவன்வேண்டல் காரிகை
எந்தளவு பற்றுகொண்டான் இந்திய நாடுமீது
அந்தப்பெண் கைநானூர் நல்புற நானூறோ
விந்தையாய் பத்திருக்க சொல்பதிற்றுப் பத்தோ
புனையு பின்னல் குறுந்தொகையோக் கூந்தல்
சினைக்கை யவளெதும் தீண்டநற்றி ணையோ
அவளின் குரலும் அறம்சொல் திருக்குறளோ
நயன்தாரா பூசும் அரிதாரம் ஆயின்
கயவர் திருடிய காற்சிலம்போ நின்தாரம்
ஒல்காப்பியம் பாடினன் காப்பியன் நீயவளின்
தோல்காப் பியம்செய்வ யோ

எழுதியவர் : பழனி ராஜன் (20-Apr-22, 10:04 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 145

மேலே