அன்பு

அன்பு
தூயவளே உன் அன்பை
துயிலும் வேளையிலும் உணர்கிறேன்
இப்பந்தம் எத்தனை ஜென்மம் கடந்து
இந்த ஜென்மத்தில் தொடர்கிறது என்று
மனதில் நினைத்து பார்த்து வியக்கிறேன்
கண்முன் இருக்கையில் நீ அமரும் நேரம்
தனிமையை மறந்து இனிமையை உணர
உள்ளத்தில் எப்பொழுதும் இன்பம் நிறைந்து
உற்சாகமாக பேசும் நேரம் ஒரு வார்த்தை தவற
உரிமையோடு உன்னை கடிந்து பேசிட
உன்மனம் புண்பட்டு என்னை நீ கோபிக்க
கோபத்திலும் உன் அன்பு வெளிப்படுகிறது
முற்றிய கோபத்தில் தீயாக நானும் எரிந்திட
எல்லாம் முடிந்ததோ என உள்மனம் தவிக்க
என்றும் போல் சகஜமாய் நீ என்னை அழைக்க
இனியவளின் அன்பை மீண்டும் உணர மனமும்
அமைதியாக ஆசுவாசத்துடன் இனித்ததுவே

எழுதியவர் : கே என் ராம் (20-Apr-22, 10:42 pm)
சேர்த்தது : கே என் ராம்
Tanglish : anbu
பார்வை : 30

மேலே